பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உக @颂家

ஆய்வுரை

இது, தலைமகள் தன் வேட்கையைக் குறிப்பினாலன்றிக் கூற்றினாற் புலப்படுத்துதல் இல்லை என்கின்றது.

(இ-ள்.) இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தன்னை நோக்கி வினவும் வினாவுக்குத் தலைவி வெளிப்பட மறுமொழி கூறுதல் என்பது அவளது பெண் தன்மைக்கு மிகவும் அருமையுடையதாதலின் கூற்றுமொழியல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும் எ-று.

"அல்ல கூற்றுமொழி என்றது, கூற்றுமொழியல்லாத குறிப்பு மொழியினை. -

"தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்பதென்ப தாமென லாவதன்றால் அருங்குல மகளிர்க் கம்மா’’

(கம்ப-சூர்ப்பனகைப் -45)

என்பதும் இங்கு நினைக்கத் தகுவதாம்.

களவின்கண் தலைவன் வினாவும் சொல்லிற்குத் தலைவி எதிர் மொழி கூறுதல்என்பதுமிகவும்அரிதாகலின் அந்நிலையில் கூற்றல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும் என்பதாம். அல்ல கூற்று மொழியென்றது, கூற்று மொழியல்லாத குறிப்பு மொழியிணை,

ங்ங்ணம் கூறுபவர் இளம்பூரணர்.

து: 琶

தலைவி தனது வேட்கையினைக் குறிப்பினாலல்லது கூற். றினால் வெளிப்படுத்துரைத்தல் அவளது பெண்மைக்கு இயல்பன்று என வற்புறுத்துவதே இந்நூற்பாவாகும். இது கொண்டு களவின்கண் தலைவிக்கு யாண்டும் கூற்று நிகழ்தல் இல்லையெனக் கருதுவார் யாருமிலர். தலைவி கூற்றாக இங்கு எடுத்துக் காட்டிய செய்யுட்கள் எல்லாம் தலைவன்தலைவியாற் கொண்ட வேட்கையைப்புலப்படுத்தும் நிலையில் அமைந்த கூற்றுக்களேயன்றித் தலைவி தனது வேட்கையினை வெளியிட்டுரைக்கும் நிலையில் வந்தன அல்ல என்பதும் இங்குக் குறித்துணரத் தகுவதாகும். .