பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛岛。

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல் நிறைந்த காதலில் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினும் நானுமிக வரினும் இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்

கொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்ற வழி மலியினும் வருக்தொழிற் கருமை வாயில் கூறினும் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் கெறிப்படு காட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற காலிரண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பின் கண்ணும்

பொய்தலை அடுத்த மடலின் கண்ணுங்

கையறு தோழி கண்ணிர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் வரைவுத்லை வரினும் களவறி வுறினும்

தமர்தற் காத்த காரண மருங்கினும்

தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழிஇத் தேறலும் வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் பொழுதும் ஆறும் புரைவ தன்மையின்