பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நீஎவன் செய்தி பிறர்க்கு, யாம் எவன் செய்தும் நினக்கு;”

இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள்,

"தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்.ஆயர்

வேந்துட்டு அரவத்து நின்பெண்டிர் காணாமல் காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத் துங்குங் குரவையுள் நின்பெண்டிர் கேளாமை ஆம்பற் குழலாற் பயிர்பயிர் எம்படப்பைக் காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி.” (கலி.108)

இது மறுத்தெதிர் கோடல்.

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்:

'அன்னையோ,

மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை இன்றி அமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய் நின்றாய்நீ சென்றி எமர்காண்பர் நாளையுங் கன்றொடு சேரும் புலத்து.' (கலித்.110) இதனுள் "அன்னையோ’’ என்பது நகையொடு கூடிய சொல்.

கைப்பட்டுக் கலங்கினும் என்பது-தலைவன் கையகப்பட்ட பின்பு என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு.

நானுமிகவரினும் என்பது - தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு.

இட்டுப்பிரி விரங்கினும் என்பது-தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்க முறினும் என்றவாறு.

அருமைசெய் தயர்ப்பினும் என்பது - தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனால் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு.

வருதலைத் தவிர்தலை அயர்ப்பு என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம் வரினும் என்றுமாம். செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க.

வந்தவழி எள்ளினும் என்பது-தலைவன் வந்தவிடத்து அல. ராகு மென்றஞ்சி இகழ்ந்தவழியும் என்றவாறு.