பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பாக டு

இதனுள், அருளினும் அருளாளாயினும் என்றமையால் கூட்டமின்மை யும், பின்னிலை முனியல் என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும், தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க.

"நறவுக்கமழ் அலரி நறவு வாய் விரிந்து இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புனரின் நுண்கயிற் றுறுவலை துமரொடு வாங்கிக் கைதை வேலி இவ்வூர்ச் செய்துட் டேனோ சிறுகுடி யானே.”

பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது.

'கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்

கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி அரை நாள் யாமத்து விழுமழை கரந்து கார்மலர் கமழுங் கூந்தற் றுரவினை துண்ணுரல் ஆகம் பொருந்தினள் வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல் அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பிற் சான்ற பேரியல் அம்மா அரிவையோ அல்லள் தெனாஅது ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன் நேர்மலை நிறை சுனை யுறையுஞ் சூர்மகள் கொல்லெனத் துணியுமென் னெஞ்சே."

(அகம்-கக்அ)

1. துணிந்தமையாலும். பா. வே.