பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப உச் கஉங்’

ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம்.

அவ்வழி, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும் என்பது-பிறனொருவன் வரைய வரின் அதனை மாற்றுதற்காகவும் தன்குறி தப்பும் என்றவாறு.

நெறிப்படு...மறைப்பினும் என்பது கூட்டம் உண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத் து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும் செவிலி அறி. ரமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு,

பொறியின் ... இயல் பின் கண்ணும் என்பது-பொறி யென்பது ஊழ். ஊழாற் கட்டட் பட்ட புணர்ச்சி:ைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைந்த எண்வகையினாற்

  • SA * # E foli i < * * سے پے 1 * یحیی سیم یا میم به تم: பெருமை இயைந்த இயல்பினளாகி நிற்றற்கண்ணும்' என்றவாறு.

எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஒதுகின்ற, -

'முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்

அச்சத்தின் அக ல் அவன் புணர்வு மறுத்தல் தூதுமுணி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிக கட்டுரை யின்மை." (மெய்ப்பாட், 23}

என்பன. அவற்றுள்,

முட்டுவயிற் கழறல் ஆவது-களவொழுக்கம் நிகழாநின்று.ழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய் துஞ்சாமை, ஊர் துஞ். சாமை, தலைவன் குறிவருவதற்கு இடையீடுபடுதல், இவ்வழிக் களவொழுக்கத்தினாற் பயனின்மை கூறல். அவ்வாறு கூறி இனி இவ்வொழுக்கம் அமையுமென வரைந்தெய்துதல்காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையளாம்.

1. அருமை சான்ற காலி, ண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பாவது, மெய்ப்பாட்டியலில் வரைந்து எ:துங் கூட்டத்திற்குரிய வைாக முட்டுவயிந் கழறல்' முதல் கட்டுரையின்மை பீறாகச் சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகள்ை:

4டையவாகிய இயல்பு என்பர் இளம்பூரணர்,