பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது - இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின் கண்ணே நிறுத்தல்.

அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறிவழிச் செல்லாளாம்.

அச்சத்தின் அகறல் ஆவது-இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினானும் குறிவழிச் செல்லாளாம்.

அவன் புணர்வுமறுத்தல் ஆவது-தலைவன் புணர்ச்சியில்வழியும் குறிவழிச் செல்லாளாம். -

துது முனிவின்மை ஆவது-அவ்வழித் தலைவன்மாட்டுத் தூதாகி வருஞ் சொற்கேட்டலை முனிவின்மை.

துஞ்சிச் சேர்தல் ஆவது உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல் காதல் கைம்மிகல் ஆவது-இவ்வாறு செய்யுங் காதல் அன் பின்மையன்றி அன்பு மிகுதல்.

கட்டுரை யின்மை ஆவது-கூற்று நிகழ்தலின்மை.

இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமை யாதலிற் பெருமை சான்ற இயல்பாயின.

பொய்தலையடுத்த மடலின் கண்ணும் என்பது-பொய்ம்மையால் மடலேறுவன் எனத் தலைவன் கூறியவழியும் வெறுத்த உள்ளத். தளாய்க் குறிவழிச் செல்லாளாம்.

கையறு தோழி கண்ணிர்துடைப்பினும் என்பது-தோழி கையி னால் தலைவி கண்ணிர் துடைத்தவழியுங் குறிவழிச் செல்லாளாம்.

வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது தலைவி வேறுபாடு எற்றினாயிற்றெனச் செவிலி வெறியாட்டுவிக்க வரும் அச்சத்தினானுங் குறிவழிச் செல்லாளாம்.

குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது - தலைவன் செய்த குறியை ஒப்புமைபற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற். கண்ணும் குறிவழிச் செல்லாளாம்.