பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப உக శ్రీs_{

அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவைபெற்றுப் புள் ளிரவம் எழும். அவ்வாறு மருளுதல்.

வரைவுதலை வரினும் என்பது-தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாக வரினும் குறிவழிச் செல்லாளாம்.

கள வறிவுறினும் என்பது - களவினைப் பிறர் அறியினும் குறி. வழிச் செல்லாளாம்.

தமர் தற்காத்த காரணமருங்கினும் என்பது-தன்னைத் தமர் காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு.

அஃது ஐயமுற்றுக் காத்தல்.

வழுவின்று...அன்னவுமுளவே என்பது-வழுவின்று நிலைஇய இயற்படு பொருண் முதலாக ஏமஞ்சான்ற உவகை யிறாகச்

சொல்லப்பட்ட இடங்களில் தன்னிடத்து உரிமையும் அவனிடத்துப் பரத்தைமையும் அன்னவையும் நிகழப்பெறும் என்றவாறு.

அன்ன என்பது அவைபோல்வன என்றவாறு.

ஓரிடத்துக்கண் என்றதனால் இவ்வாறு எல்லார் மாட்டும் எவ்விடத்தும் நிகழாது என்றவாறாம். எனவே மேற் குறிப்பினும் இடத்தினு மல்லது (களவியல் 18) கூற்று நிகழாதென்பதனை மறுத்து ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம்.

அவற்றுள் வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் என்பது-தலைவனை இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலை நிறுத்தப்பட்ட இயற்பட மொழிந்த பொருண்மைக் கண்ணும் தன்வயின் உரிமைதோன்றவும் அவன்வயிற் பரத்தைமை தோன்றவும் கூறும் தலைவி என்றவாறு.

இரண்டினுள் ஒன்றுதோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந் தோற்ற வருவனவு முளவாம்.

பொழுது மாறும்...சிந்தைக் கண்ணும் என்பது - தலைவன் வருங் காலமும் இடனும் குற்றமுளவாதலான். ஆண்டு அழிவு வந்த சிந்தைக் கண்ணும் தலைமகள் தன்வயின் உரிமையும் அவன். வ பிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு.