பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菇毁。岛 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

காமஞ் சிறப்பினும் என்பது - தலைமகன்மாட்டு வேட்கை மிகினும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் உரைக்குத் தலைவி என்றவாறு.

அவன் அளி சிறப்பினும் என்பது - ജ്ഞാഖ് தலையளி மிக்கவழியும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக்கூறும் என்றவாறு.

ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது-ஏமம் பொருந்திய மகிழ்ச்சி வந்துழித் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. அஃதாவது இவன் வரைந்தல்லது நீங்கான் என்னும் உவகை.

பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள்:

கணங்கொள் இடுமணற் காவி வருந்தப் பிணங்கிரு மோட்ட திரைவந் தளிக்கும் மணங்கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை’’ (கலித். 131)

என்னும் பாட்டினுள் தான் ஊடினாளாகவும் மகிழ்ந்தவாறும் அவன் வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க.

இச் சூத்திரத்தாற் சொல்லியது மறைந்தவற் காண்டல்’ முதலாக ஒதப்பட்ட அறுவகைப் பொருண்மையும், கைப்பட்டுக் கலங்கல் முதலாகக் கூறியவாயில் கொள்ளாக்காலை ஈறாகவரும் மகிழ்ச்சியினால் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழி எண்ணுதல் சான்ற அருமறையைச் சொல்லுதலும், இவ்வாறும் எண்ணந்தான் உரையாக்காலத்துத் தன்னுயிர் செல்லுமாறு உ ைர த் த லு ம், வேற்றுவரைவு வரின் அது மாற்றுதல் முதலாகத் 'தமர்தற்காத்த காரணப்பக்கம் ஈறாகத் தன் குறியிழைக்க நிற்கப் பெறும் எனவும், அவ்வழித் தலைவன் வந்து பெயர்ந்துழிக் கலக்கமின்றி தெளி. தலும், வழுவின்று நிலைஇய இயற்படு பொருள் முதலாக ஏமம் சான்ற உவகை ஈறாகத் தான் உரியளாகிய நெறியும் தலைவன் அயலாகிய நிலையும்போ லவரிற் சொல்லப்பெறும் எ ன வு ம்

1. நிகழ்ச்சியினால் எனத் திருத்துக. 2. லவளாற் எனத் திருத்துக: