பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசல் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

எனவாங்

கணையன பலபா ராட்டிப் பையென வலையர் போலச் சோர்பதன் ஒற்றியென் நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணுTஉப் புலையர் டோலப் புன்க னோக்கித் தொழலுந் தொழுதான் தொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் தொழுஉந் தொடுஉமவன் றன்மை ஏழைத் தன்மையோ வில்லை தோழி.’’ (கலி.55)

இதனுட் பாராட்டி யெனப் பொய் பாராட்டலுஞ், சோர் பதனொற்றி"யென நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி கூறுதலிற் கூடுத லுறுதலும், புலையர் போல நோக்கி யென நீடு நினைந்திரங்கலும், தொழலுந் தொழுதானென இடம்பெற்றுத் தழாஅலுந், தொடலுந் தொட்டானென மெய்தொட்டுப் பயிறலும், அவனிகழ்த்தியவாறுங் கூறி, மதத்தாற் பரிக்கோலெல்லையில் நில்லாத களிறுபோல, வேட்கை மிகுதியான் அறிவினெல்லையில் நில்லாதவனெனத் திராத தேற்றமும் ஒருவாற்றாற் கூறித் தனக்குப் பெருமைசான்ற இயல்பைப் பின்னொருகால் தோழிக்குக் கூறியவாறு காண்க.

இனித் தலைவர்க்குப் பெருமை அமைந்தன எட்டுக்குன மென்று கூறி, அவற்றை,

  • இளமையும் வனப்பு மில்லொடு வரவும்

வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியும் தேசத் தமைதியும் மாசில் சூழ்ச்சியும்' (பெருங்.1:36-89-91)

எனப் பொருள் கூறின், "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொல்.பொ. 75) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய எண்கள், அவை கூறிய வடநூல்களில் வேறே எண்ணுதற்கு உரியன சில இல்லாமல் எண்ணானாற்போல, ஈண்டும் இளமை முதலிய எட்டும் ஒழிய வேறெண்ணுதற்கு உரியன எட்டுந் தலைவற்கின் றாகக் கூறல் வேண்டும்; ஈண்டு அவ்வாறின்றித் தலைவற்கு உரியன வாகப் பலவகைகளான எவ்வெட்டுளவாகக் கூறக்கிடந்தமையின் அங்ங்சம்