பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா க çr

نام

என்பது சூத்திரம்.

இனி, இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், காமப் புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் துதலிற்று,

(இதன் பொருள்) : இன்பமும் பொருளு...... கானுங் காலை என்பது-இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்ல்ப் பட்டு, அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு.

அன்பொடு புணர்ந்த ஐந்தினை என்றதனால் கைக்கிளை பெருந் திணையை ஒழித்து நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்தவாறு என்னை யெனின், கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பின ர்ாகிப் புணர்தலும்பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப ஆகலானும், அவை நிகழுங்கால் அத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும், இவை அன் பொடு புணர்ந்தன என்க. அஃதேல், ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தன. வாம் எனின், அவை(யும் அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவை யாகலின், அன்பொடு புணர்ந்தனவாம்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள்-எசு)

என்பதனானும் கொள்க.

இனி, இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமும் ஆயின வாறு என்னையெனின், புணர்தல் முதலாகிய ஐந்துபொருளும் இன்பந் தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப் பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி வஞ்சி உழிஞை, தும்பை என்பனவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும், புணர்தன் முதலாகிய உரிப்பொருளான் வருவ தோர் கேடின்மையானும், பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத் தின்வழி நிகழ்தலானும், பாலையாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலானும், இவை அறமாயின. அஃதேல், கைக்கிளை பெருந் திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அற முதலாகிய மூன்றுமன்றி அன்பொடு புணர்தல் வேண்டுமெனின், காஞ்சி அன்பொடு புணராமையும் பாடாண்பாட்டு அன்பொடு புணர்தல் ஒரு