பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் لئے

தலையன்மையும் அவ்வோத்தினுள் கண்டுகொள்க. ஏனையிரண்டும் அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா : அஃதேல், அறனும் பொருளும் ஆகா மையும் வேண்டுமெனின், குலனும் குணனுங் கல்வியும் உடையராகிய அந்தணர் என விசேடித்தவழி, ஏனையோர்க்கு இம்முன்று பொருளும் இயைதல் வேண்டுமென்னும் நியமம் இன்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும்.

இனி, ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும், அந்நிலமும் காலமும் கருப்பொருளும், களவினும் கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப் படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக் கூட்டம் எனக் கொள்க.

இன்னும் அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டம் என்றதனால் எல்லா நிலத்தினும் காமக்கூட்டம் நிகழப்பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க."

மறையோர் தேஎத்...யோரியல்பே என்பது-மறையோரிடத் தோதப் பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினை யுடைய ராகிய துணைமையோர்? நெறி என்றவாறு.

மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது, கன்னியை அணிகலன்அணிந்து பிரமசாரியா யிருப்பானொருவனுக்குத்

1. புணர்தலும் புணர்தல் கிமித்தமும் குறிஞ்சி கிலத்திற்கேயுரியவாகக் கூறப்படினும் எல்லா கிலத்தினும் காமக் கூட்டம் நிகழப் பெறும் என்பதனை, அன்பொடு புணர்ந்த ஐக்திணைமருங்கிற் காமக்கடட்டம் என்ற தொடரால் தொல்காப்பியனார் புலப்படுத்தியுள்ளார் என்பதும், இவ்வாறு எல்லா கிலத்தினும் புணர்தல் ஒழுக்கம் நிகழ்தல் உண்டு என்பதனை ச் சங்கச் சான்றோர் இயற்றிய அகத்தினைச் செய்யுட்களிற் காணலாம் என்பதும் இவ்வுரைத் தொடர்களால் இனிது புலனாம். -

2. கந்திருவர் ஆவார் தெய்வத்தன்மை வாய்ந்த பதினெண் கணங்களுள் 'ஒரு கணத்தினைச் சார்ந்தோர். இவர்கள் இசைத் துறைகளை வளர்க்கும் யாழினை ஏக்தி ஆணும் பெண்ணுமாக இருவராய் இணைந்து செல்லும் இயல்பினராதலின் துறையமை கல்யாழ்த் துணைமையோர் என்று குறிக்கப்பெற்றனர்.