பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவியல்-நூற்ப உக கடுக

ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தை யும் உள-இக் கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங்களிலே தன்னிடத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங் கூற்று நிகழ்தலுள:

ஆன் ஆனவென ஈறு திரிந்தது.

அன்னவும் உள-அவைபோல்வன பிறவும் உள என்றவாறு.

"அன்னபிற வென்றதனான் இன்னுந் தலைவி கூற்றாய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க,

ஆய்வுரை

இது, களவொழுக்கத்தில் தலைமகள்பால் தோன்றும் உள்ள நிகழ்ச்சியினையும் கூற்றினையும் தொகுத்து உணர்த்துகின்றது.

(இ~ள். தன்னை அவன் காணவொண்ணாது மறைந்து நின்று தான் அவனைக் காணுதலும், தன்னியல்பினை அவன் உணருமாறு அவனெதிரே புலப்பட்டுத் தோன்றுதலும், தனது உள்ளத்தே நிரம்பிய காதல் காரணமாக வினவிய வினாவுக்கு எதிர்மொழி கூறவியலாது மொழி தடைப்படுதலும், தலைவன் தனது வேட்கைக் குறிப்பு உணர்ந்து தாழ்ந்து அணுகிய நிலையில் அவன் கருத்துக்கு உடன்படாது மறுத்தலும், அவனது காதல் மிகுதிகண்டு மீண்டும் ஏற்றுக் கொள்ளுதலும், பழியொடு படாத தனது முறுவற் குறிப்பினைச் சிறிதே புலப்படுத்தலும், தலைவனது கையகப்பட்ட நிலையில் என்ன காரியம் செய்தோம்’ என மனக், கலக்கமுற்ற நிலையிலும் தனக்கு இயல்பாக அமைந்த நாணம் மீதுர்ந்த நிலையிலும், தலைவன் தன்னைச் சிறிது காலம் பிரிந்த நிலையிலுளதாகிய இரக்கத்தின்கண்னும் தான் தலைமகனாற் காண்டற்கரியளாகிய காலத்து அவன் வருதலைத் தவிர்ந்த நிலையிலும், அவன் தன்னைக் காணவந்த காலத்து ஊரவர் கூறும் அலர்மொழிக்கு அஞ்சி அவனைக் க தலை விரும்பாது

தவிர்ந்த நிலையிலும், தலைவனொடு 5ಣTಿ T காதலுறவு வெருவிவாய் சோர்ந்து வெளிப்பட்ட நிலையில் அதனைச் செவிலி

முதலியோர்க்குப் புலனாகாதவாறு தன் மனத்தடக்கி இரங்கும் நிலை. யிலும், தான் தலைவனைக் காணப் பெறாமைக்கு உளம் தொந்து “நின்னைப் பிரியேன்” என அவன் தன்னை நோக்கிக் கூறிய தெளிவுரையினை உறுதியெனக் கொள்ளாது ஐயுறும் நிலையிலும்,