பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தலைவன் வருகின்ற வழியிடையேயுளவாகும் இடையூறுகளை நினைந்து தன் மனத்தே அச்சம் மிகுந்த நிலையிலும், தலைவன் (வரைவிடைவைத்துப்) பிரிந்தபோது மனம் கலங்கிய நிலையிலும், தலைவனைக் கண்டு அளவளாவம் பெற்றபோது மகிழ்கூர்ந்த நிலையிலும், தலைவன் வருதற்குத் தடைகளாக வழியிடையே நேரும் இடையூறுகள் பலவர்தலின் அவன் இங்கு வருதல் அரிது எனத் தோழி கூறிய நிலையிலும், தோழி கூறியதனைத் தன்மனம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும், புறத்துப் போய் விளை. யாட இயலாதவாறு தான் இற்செறிக்கப்பட்டுக் கலங்கி உள்ளஞ் சிதைவுற்ற நிலையிலும், ஆய்ந்து நிறைவேற்றுதற்கு உரிய அரிய களவொழுக்கத்தினைத் தன் தோழிக்கு வெளிப்படுத்துதலும், தனது வருத்தத்தினை வெளிப்படக் கூறவொண்ணாத காலத்து நெட்டுயிர்ப் பெறிதலும், உயிர் தனது உடம்பினை விட்டு நீங்குவது போலும் துன்பமுண்டாக அயலார் தன்னை மணம் பேச. வந்த நிலையில் அதனை மாற்றுதற்பொருட்டும், தலைவனொடு தனக்குக் கூட்டமுண்மை உலகியலால் நாடி ஆராயுங்காலத்து மெய்வேறுபாடு நிகழ்ந்துழி அதனைப் பிறர் அறியாதபடி மறைக்கும் நிலையிலும், பண்டை நல்வினையாற் கட்டப்பட்ட உறவி. னைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினாலே தலைவன் தன்னை மணந்து கொள்ளுதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி தான் அரியளாந் தன்மையினைப் புலப்படுத்துதலமைந்த எண்வகை மெய்ப்பாடுகளால் (தன்னைத்தான் கட்டுப்படுத்தியொழுகும்) பெருமை நிறைந்த இயல்பினளாய் நிற்கும் நிலையிலும், தன்குறையினை விரைந்து முடித்துக் கொள்ளும் வேட்கையுடையனாகிய தலைவன் தன் பெருமைக்குத் தகாதவாறு மடலேறுவேன்’ எனப் பொய்யொடுமிடைந்து கூறும் மடற் கூற்றின் கண்ணும், தலைமகளது துயர்கண்டு செயலற்ற நிலையினளாகிய தோழி துன்பக் கண்ணிரைத் துடைத்துத் தன்னை ஆற்றுவித்த நிலையிலும், தலைவிக்கு இவ்வுடல் மெலிவு எதனால் ஏற்பட்டது எனச் செவிலி வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவிக்க வரும் அச்சத்தின் கண்ணும், புள் முதலியவற்றால் இயல்பாக நிகழ்வனவற்றை ஒப்புமையற்றித் தலைவன் செய்த அடையாளங்களாகக் கொண்டு மயங்கிய நிலையிலும், தலைவன் மணந்து கொள்ள வரும் நாள் அணித்தாகிய நிலையிலும், களவொழுக்கம் பிறரால் அறியப்பட்ட நிலையிலும், பெற்றோர் தன்னைப் புறத்துப் போகாதவாறு இல்லின்கண் செறித்தல் காரணமாக அமைந்தபக்கத்தும், தலைவன்