பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஇசு தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வரையா நாளிடை வந்தோன் முட்டினும் - வரையாதொழுகுந் தலைவன் ஒருஞான்று தோழியையானும் ஆயத்தையானுஞ் செவிலியையானுங் கதுமென எதிர்ப்பினும்;

உரையெனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் - நொதுமலர் வரைவிற்கு மனமுரசியம்பிய வழியானும் பிறாண்டானுந் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக் கூறி அதனை நமரறியக் கூறல்வேண்டுமென்றுந் தலைவற்கு நம் வருத்தமறியக் கூறல் வேண்டுமென்றுங் கூறுதற்கண்ணும்; தானே கூறும் காலமும் உளவே-இம் மூன்று பகுதியினுந் தோழி வினாவாமல் 'தலைவி தானே கூறுங் காலமும் உள (எ-று.)

உம்மையால் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியுடைத்து,

உ-ம் : அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிர் றோன்று நாடன் தகாஅன் போலத் தான் தீது மொழியினுந் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநிரை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக் கடுவனு மறியுமக் கொடியோ னையே. ’ (குறுத். 26)

யாரு மில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுப்சுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே’’ (குறுந். 25)

குறுந், 25,267 இவற்றுள் துறந்தான்போலவும் மறந்தான் போலவுங் கருதித் தான் தீதுமொழியினுமெனவும் யானெவ்ன் செய்கோ ன்ெனவுந் தோழி வினவாக்காலத்து அவன்தவற்றை வர்ைவில்ட் வைத்தலின் ஆற்றாமைக்கு அறிவித்தாள். .

நற்றிணை,128:இது தோழி வினாவியவழித் தலைவி கூறியது.

1. தானே கூறலாவது, தோழி வினவாத நிலையில் தானே வலிதிற்சென்று கூறுதல்.