பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககன் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உங். உயிரினும் சிறக்தன்று காணே நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்பச்சிறக் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய கெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் கன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.

இளம்பூரணம்

இதுவும் அது."

(இ-ள்.) உயிரினும் நாண் சிறந்தது; அதனினும் குற்றந் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது; என முன்னோர் கூற்றை யுட்கொண்டு தலைவனுள்ள விடத்துச் செல்லலும் வருத்த மில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவுந்தோன்றும் அவை பொருளாம் என்றவாறு.

மன் ஆக்கத்தின்கண் வந்தது. எனவே இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறற்க என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச் சிறந்த தென்றவாறு.

நச்சினார்க்கினியம்

இது தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி அவையும் அகப்பொருளாம் என்கின்றது.

(இ-ள்.) உயிரினும் நாண் சிறந்தன்று-எல்லாவற்றினுஞ் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது; நாணினுஞ் செயிர் தீர் கற்புக் காட்சி சிறந்தன்று-அந் நாணினுங் குற்றந் தீர்ந்த கற்பினை நன் றென்று மனத்தாற் காணுதல் சிறந்தது; எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய நெஞ்சுடனே; காமக்கிழவன் உள்வழிப்படினும்-தலைவன் இருந்தவிடத்தே தலைவிதானே செல்லினும்; தாவில் நன்மொழி கிழவி

1. இதுவும் அது-இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்து. தல் நுதலிற்று. -

தன்னுயிரினும் சிறந்த காணம் ங்ேகத் தலைமகன் இருக்குமிடத்தைத் தலைவி சென்று அடைய எண்ணுதல் உயிரினும் சிறந்த காணினும் சிறங் த கற்புப்பற்றியே என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.