பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உங் &శ్రీశ్రీ

கிளப்பினும்-மனவலியின்றிச் செல்வாமெனக் கூறும் நன்மொழியினைத தலைவி தானே கூறினும்; பொருள் தோன்றும்-அவை அகப்பொரு ளாய்த் தோன்றும்; ஆவகை பிறவும் மன் பொருள் தோன்றும் - அக்கூற்றின் கூறுபாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும் அகப்பொருளாய்த் தோன்றும் ( எ - று. )

என்றது தலைவி கூற்று, சிறுபான்மை வேறுபட்டு வருவன வற்றைக் கற்புச்சிறப்ப நாண் துறந்தாலுங் குற்றம் இன்றென் றற்குச் செயிர் தீரென்றார்; நன்மொழி யென்றார் கற்பிற் றிரியாடிையின்; அவை இன்னோரன்னவழி நெஞ்சொடு கிளத்தல் போல்வன. இவள் கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவதென்க'. மன் -ஆக்கம், இழிந்த பொருளும் உயரத் தோன்றலின்."

மள்ளர் குழிஇய விழவி னானும் மகளிர் தழி இய துண்ங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கை கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.” (குறுந் 31) யாண்டுங் காணேனென அவனை வழிபட்டுக் கூறினமையிற் கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும் பெண்டன்மையிற் றிரியக் கருதாது நன்குமதித்தவாறு காண்க. - - -

நற்றிணை, 865, குறுந் 11 : இவை தோழிக்கும் நெஞ்சிற்குங் கூறியன.

'விழுந்தண் மாரிப் பெருந்தண் சாரற்

கூதிர்க் கூதளத் தலரி நாறு மாதர் வண்டின. தயவருந் தீங்குரன்’’

நற்றிணை, 244 : இ ஃ து அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத்

தலைவி கூறியது. இன்னும் அதனானே தோழியைத் தலைவி ஆற்றுவித்தலுங் கொள்க. ஆய்வுரை

இது, தலைவி தன் களவொழுக்கத்தினைத் தோழிக்குத் தானே கூறுதற்குரிய இன்றியமையாமை கூறுகின்றது.

1, இங்கனம் தலைவி கூறும் கூற்று தோழி, தலைவன் என்னும் இருவர்க்கு மட்டும் புலனாகும்படி நிகழும் என்பதாகும்.

2. சிறப்பில்லனவாகிய இவையும் உயர்ச்சியையுடைய அகப்பொருளாம் என்பது பட வந்தமையின் 'மன் என்னுஞ்சொல் இங்கு ஆக்கப் பொருளில் வந்தது என்பதாம்.