பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா డో ககதி

உண்டி என்பது-உண்ணும் அளவிற் குறைதல்.

செய்வினை மறைத்தல் ஆவது-பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத், தனித்து நிகழ்த்துதல் அன்றியும் தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்பட விடாது தோழியை மறைத்தலும் என்றுமாம்.

செலவினும் என்பது-எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல்.

பயில்வினும் என்பது-ஓரிடத்துப் பயிலுதல்.

புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது- புணர்வதற்கு முந்துற்ற காலம்.

உள்ளுறுத்தல் ஆவது-உட்கோடல்.

உணர்ச்சி ஏழாவது-நாற்ற முதலாகச் சொல்லப்பட்டவற்றால் வரும் மன நிகழ்ச்சி ஏழும்.

பல்வேறு கவர்பொருள் நாட்டம் என்பது-ஒன்றோடொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களாலே யாராய்தல்.

குறையுறற் கெதிரிய கிழவனை மறையுற என்பது - களவொழுக்கத்தின் கண்ணே யுறுதற்காகத் தனது குறையைச் சொல்லவேண்டி எதிர்ப்பட்ட தலைவனை யென்றவாறு,

மறையுற என்பதனை முன்னே கூட்டுக.”

பெருமையிற் பெயர்ப்பினும் என்பது-தலைவனது பெருமை. யான் நீக்கலும் என்றவாறு."

உலகுரைத் தொழித்தல் என்பது-உலகத்தார் மகட்கொள்ளு. மாறு கொள்ளெனக் கூறுதல்.

1. எதிரிய-எதிர்ப்பட்ட. 2. மறையுறக் குறையுறற்கெதிரிய கிழவனை' என இயையும். மறை-களவு

3. பெருமையிற் பெயர்த்தலாவது, தலைவனது பெருமையை எடுத்து க் கூறி அவன் அவ்விடத்தை விட்டுப் பெயரும்படி கேட்படுத்தல்.

,ஞ்ெ சய்து காள்ளுதல் ب - لقة ب 7 1 تم ثقة