பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா டி- 除需分

எஞ்சாது கிளந்த இருதான்கு கிளவியும் என்பது - ஒழியாது கூறிய எட்டுக் கூற்றும் என்றவாறு. முன்னைப் புணர்ச்சி முறையறிந்தாளாதலின் அவன் இரந்து பின்னின்றுழி ஈண்டுக் கூறிய எல்லாம் அவன் உள்ளக் கருத்தறியுந்துணையும் தழிஇக்கொண்டு கூறினல்லது ஒழித்தல் பொருளாகக் கூறாள் என்பது கொள்ளப்படும். இவை எட்டும் குறையுற வுணர்தலின் பகுதி.

வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் என்பது - மாயம் சொல்லிவந்த கிழவனைத் தலைவி பொறுத்த காரணம் குறித்த காலையும் தோழி கூற்று நிகழும் என்ற வாறு.

அவ்வழித் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் உணர்தலும் தலைவன் கேட்டதற்கு மாற்றம் கூறுதலும் உளவாம். மாயம் செப்பிவந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ மான் போந்ததோ எனக் கூறல்.

இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும் ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப் புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப" (இறையனாரகப். 6)

என்பதனாற் குறையுற வுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று

கொள்க.

1. தலைமகனை அவ்விடத்தைவிட்டு நீக்குதல் என்னும் எண்ணம் இன்றி அவனது உள்ளக் கருத்தினை அறியுமளவும் அவனை விலக்காமல் எற்றுக் கொண்டு கூறியன இக்கூற்றுக்களாதலின், எஞ்சாது கூறிய இருநான்கு விளவியும் என்றார். எஞ்சுதல் - ஒழிதல்; tங்கல்,

2. மாயம் . பொய்; கிகழாதன கூறுதல் என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றது.

தலைவியும் தோழியும் ஒருங் கிருக்தபோது பதியும் பெயரும் பிறவும் வினவிய கிலை:ை க்க ன் பொறுத்த காரண . குறித்த தோழி கூக் து என்பதாம்.