பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呜呜<y தொல்காப்பியம் - பொருளதிகாரம்

புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் என்பது - மேற்சொல்லப்பட்ட மூவகையானும் புணர்ச்சியுண்மை பொருந்திய பின் தலைவன்கண் தாழநிற்றற் கண்ணும் என்றவாறு, !

அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும் நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமெனவும் இவ்வகை கூறுதல்.

குறைந்து அவட்படரினும் என்பது-மேல் தலைவன் புணர்ச்சி யுண்மை யறிந்து தாழநின்ற தோழி தானுங் குறையுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. 2

இக் கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப்புணர்ச்சி யுள்வழியும் குறையுற்று மெய்யுறு புணர்ச்சிவேண்டித் தலைவிமாட்டுச் செல்லுங் காலத்தும் ஒக்கும்.

மறைந்து அவள் அருகத் தன்னொடும் அவளொடும் முன்னம் முன்தளை இப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் என்பது - மேல் தலைவன்லாட்டுத் தோழி குறைநயப்பிக்கச் சென்றவழித் தோழி சொல்லும் குறிப்பு மொழிக்கு அவள் மறைந்து அரியளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்கொண்டு வழிபட்டு முயலும் பலவேறு பக்கத்தின் கண்ணும் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

மறைத்தலாவது-தன் மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல். அருகுதலாவது-இசைவிலாதாரைப் போல நிற்றல். முன்னமுன் தளைதலாவது - கூற்றினானன்றிக் குறிப்பினானுணர்தல். முதன்மூன் றளை இ என்று பாடமாயின், மனத்தினானும் மொழியினானும் உடம்பினானும் ஒருங்கே அளவி என்றுமாம். பின்னிலை நிகழும் பல்வேறு மருங்காவது வழிபாடு கொடுவருங் கூற்றுவேறுபாடு. எனவே தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம் புனத்தயல் வாராநின்றான் எனவும், அவன் என்மாட்டு ஒருகுறை

1. புணர்ந்தபின் என்றது, தலைவியுடன் தலைவனுக்கு முன்னமே கூட்டம்

உண்டு என்பதனைத் தோழி தெளிவாகத் தெரிக் து கொண்ட பின் என்பது கருத்து.

2. குறைதல் - குறையுறுதல்; தனது குறையினை முடித் துதவும்படி வேண்டுதல், 'குறைந்த திருகேரிசை' என்ற தொடரில் அமைக்த குறைதல் என்பது

குறையுறுதல் என்ற பொருளிற் பயின்றுள்ளமை காண்க.