பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

αίδ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கல்லது எய்தல் அரிதாயிற்று. போக துதர்தல் மனையறத்தர்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக்காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கிவைத்தார் என்க.

இதனாற்சொல்லியது ஈண்டுக் களவென்றோதப்படுகின்ற ஒழுக்கம் அறம்பயவாத புறநெறியன்று; வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு. '

நச்சினார்க்கினியம்

இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தி ைமையிற் களவியலென்னும் பெயர்த்தாற்று; பிறர்க்குரித்தென்று இருமுதுகுரவரால் கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங்கரந்த உள்ளத்தோடு எதிர்ப் பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை மறைநூல்’ என்றாற் போலக் கொள்க !

'களவெனப் படுவது யாதென வினவின்

வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல் முளையெயிற் றமர்நகை மடதல் லோளொடு தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன் விளையாட்டிடமென வேறு மலைச் சாரல் மானினங் குருவியொடு கடிந்து விளையாடும் ஆயமுந் தோழியும் மருவி தன் கறியா மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்.'

1. தந்திரம்-நூல்; என்றது. நூலிற் போற்றியுரைக்கப்பட்ட ஒழுக்கத்தினை விகற்பம் - வகை கூறுபாடு.

2 உலக மக்கள் பலர்க்கும் எளிதிற் புலப்படாது மறைந்துள்ள நுண்பொரு களே உணர்த்துதல் பற்றி வேதம் மறைநூல்' எனப் பெயர் பெற்ருற் போன்று உலகத்தார் அறியாதவாறு ஒத்த அன்புடைய ஒருவன் ஒருத்தியாகிய இருவரிடையே, மறைவின் நிகழும் அன்பின் ஐந்திணை ஒழுகலாறு களவு எனப் பெயர் பெற்றது என்பதாம். பிறர் பொருளைக் கவரும் கள்வர் மறைந்து ஒழுகுமாறு போன்று அன்புடைய காதலர் இருவரும் உலகத்தா ரறியாது மறைக் தொழுகுதலின் அவர்தம் கரந்தவொழுக்கம் களவெனப் பெயர் பெறுவதாயிற்று. கள வென்பது ஒப்பிளுல் ஆயபெயர்.