பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப உச கனகி

சிற்றில் இழைத்துஞ் சிறுசோறு குவைஇயும் வருந்திய வருத்தந் திர யாம் சிறிது இருந்தன மாக எய்த வந்து

டமென் பனைத்தோள் நடநல் லிரே எல்லும் எல்லின் றசைவு மிக உடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானு மிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ எனமொழிந் தனனே ஒருவன் அவற்கண்டு இறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி இவை நுமக் குரிய அல்ல இழிந்த கொழுமீன் வல்சி என்றனம் இழுமென நெடுங்கொடி துடங்கு நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு தன்னுதால் ஒழிகோ யானென அழிதகக் கூறி யான்பெயர் கென்ன நோக்கித் தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும்என் கட்கே’’ (அகம், 110)

என வரும். அன்னை என்றது நற்றாயை.

ஏத்தல் என்பது - தலைவனை உயர்த்துக் கூறுதல். அது, மகளுடைத் தாயர் தலைவன் உயர்ந்தான்’ என்றவழி மனமகிழ்வராகலின், அவ்வாறு கூறப்பட்டது. உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு.

அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனியசந் தனளென வினவுதி அதன்திறம் யானுந் தெற்றென உணரேன் மேனாள் மலியூஞ் சாரலென் தோழி மாரோடு ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலி புலி என்னும் பூசல் தோன்ற ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன்