பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச 安夺岛

வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டியும் என்பது-தமர் வரைவுடன் பட்டமையைத் தலைவற்கு உரைக்க வேண்டியும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

ஆங்கதன் றன்மையின் வன்புறை என்பது - அவ்வாறு வரைவுடம்பட்ட தன்மையினால் தலைவியை வற்புறுத்தற் கண்ணும் என்றவாறு.

'கூர்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்

நூலற முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குத் துரமணற் சேர்ப்பனை யானுங் காதலென் பாயும் நனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர் வேண்டும் அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.’’ (குறுந். 51)

'அம்ம வாழி தோழி நம்மொடு

சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின் மென்தோள் நெகிழவும் திருதுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் தொலைத்த குன்ற நாடற் கயர்ந்தனர் மணனே.” (ஐந்குறு. 230)

என வரும்,

பாங்குற வந்த நாலெட்டு வகையும் என்பது-பகுதிப்பட வந்த முப்பத்திரண்டு வகைப்பட்ட பொருண்மையும் என்றவாறு.

அவையாவன மேற்சொல்லப்பட்ட முன்னுற வுணர்தல் வகை குறையுற வுணர்தற்கண் பெருமையிற் பெயர்த்தல், உலகுரைத் தொழித்தல், அருமையினகற்றல், பின் வாவென்றல், பேதைமை யூட்டல், முன்னுறு புணர்ச்சி முறை நிறுத் துரைத்தல், அஞ்சி யச்சுறுத்தல், உரைத்துழிக் கூட்டம் எனச் சொல்லப்பட்ட எண்வகை மாயஞ் செப்பி வந்த கிழவனைப் பொறுத்த காரணம் குறித்தலாகிய இருவருமுள்வழி அவன் வர வுணர்தல், புணர்ந்தபின் அவன்வயின் வணங்கல், குறைநயப்பச் சேறல் குறைநயப்புவகை, நயந்தமை கூறல், அலராமென்றல், புணர்ச்சி வேண்டியவழிக் கூறல், பிரிவு