பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா க 高含

இக் களவைக் காமப்புணர்ச்சியும்’ (தொல், பொ. செய். 187) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்திற் கூறிய நான்கு வகையானும் மேற்கூறுமாறு உணர்க.

இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணை யியலுட் கூறி அதற்கினமாகிய பொருளும் அறனுங் கூறும் புறத்திணையை, அதன் புறத்து நிகழ்தலிற். புறத்திணை வியலுட்கூறி யீண்டு அவ்வின் பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின் இஃது அகத்திணை யியலோடு இயைபுடைத்தாயிற்று. வழக்கு...... நாடி’ என்றலின் இஃது உலகிய லெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப் பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்ருதலின்.

இச் சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம்பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்னதா மெனவுங் கூறுகின்றது.

(இதன் பொருள்): இன்பமும் பொருளும் அறனும் என்றாங்குஇன்பமும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப்பொருள் களுள்; அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் ஒருவனோடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்போடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தன் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள் ; காமக் கூட்டங் காணுங் காலை புணர்தலும், புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப்புணர்ச் சியை ஆராயுங்காலத்து; மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள்வேதம் ஓரிடத்துக் கூறிய மனமெட்டனுள்; துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு-துறை அம்ைந்த நல் யாழினையுடைய பிரி வின்மையோரது தன்மை (என்றவாறு).

அன்பாவது,

'அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந்-தடுமாறிக் கண்னெதிர் நோக்கொத்த காரிகையிற் கைகலந்து உண்ணெகிழச் சேர்வதா மன்பு.’

1. “மறையோர் தேளத்து மன்றல்' என்ற தொடரில் 'மறையோர் : என்பதனை ஒரு சொல்லாக் கொண்டு, 'மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்பது அவரதாகிய நூலை' எனப் பொருள் வரைந்தார் இளம்பூரணர். மறையோர் என்பதனை மறை ஓர் என இரண்டு சொல்லாகப் பிரித்து 'மறை ஓர் தேளத்து என்பதற்கு 'மறை ஓரிடத்துக் கூறிய' எனப் பொருள் வரைந்தார் கச்சினார்க்கினியர், 2. பிரிவின்மையோர். ஆணும் பெண்ணுமாக இணைபிரியாதியங்கும் கந்தருவர்.

தொல்-சிறப்புப்பாயிரம்