பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

点。芬安 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

'எழாஅ யாகலின் எழின லந் தொலைய

வழாஅ தீயோ நொதுமலர் தலையே யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்கண்

நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற் பிதிரிற் சிறுபல் காய வேங்கை வியகு மோங்குமலைக் கட்சி மயிலறி பறியா மன்னோ' பயில்குரல் கவரும் பைம் புறக் கிளியே.' (நற்றிணை,13)

இது தலைவி வேறுபாடு கண்டு ஆாாயும் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது. நாட்டத்தானும் என்னும் உம்மை முற்று, நாட்டமெல்லாந்' தழீஇயினமையின் ஆனுருபு இடப்பொருட்டாம். அஃது இடமாக வருகின்ற எட்டனையும் இடத்தியல் பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல் வருகின்ற எட்டனையுந் தலைவற்கு உரைக்குங் காலமும் ஒருங்கு நிகழுமென்பதாம். இங்ஙனம் நாடி மதியுடம்படுக்குந்

துணையுந் தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும்.

குறையுறற்கு எதிரிய கிழவனை பறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும் :

தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்பின்மை ஒருதலையாக உடையளல்லள் .

உலகு உரைத்து ஒழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற் கரந்த தோழி உலகத்தாரைப்போல் வரைந்து கொள்ளெனக் கூறித் தலைவனை நீக்கினும் :

அருமையின் அகற்சியும் - அவை கேட்டுப் பிற்றை ஞான்றும் வந்தவன் மாட்டுச் சிறிது நெஞ்சு நெகிழ்ந்த தோழி அங்ங்னங் கூறாது இவள் அரியளெனக் கூறுதலும் :

இருவருமுள்வழி யவன்வர வுணர்தலின் இருவருள்ளமும்

உணர்ந்து அங்ங்னங் கூறினாள்.