பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்பா உடு கஅதி

அவள் அறிவுறுத்துப் பின் வா என்றலும் - தலைவனை நோக்கி நீ காதலித்தவட்கு நீயே சென்று அறிவித்துப் பின்னர் என் மாட்டு வருகவென்றலும் : -

உ-ம்: 'தன்னையுந் தானானுஞ் சாயலாட் கிஃதுரைப்பின் என்னையும் தானப் படுங்கண்டாய் -மன்னிய வேயேர்மென் றோளிக்கு வேறாய் இனியொருநாள் நீயே யுரைத்து நிறு.’’

இது நீயே யுரையென்றது.

  • நாள்வேங்கை பொன்சொரியும் தன்மலை தன்னாட

கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார்-கோள். * வேங்கை "அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்

கென்னையோ தாளை எளிது.” (திணை. நூற். 20)

இது கையுறை மறுத்துப் பின் வருக என்றது.

இவை ஒரு கூற்றாக வருவன வுளவேற் காண்க.

பேதைமை ஊட்டலும் . அங்ங்னம் பின் வருகவென்றுழி முன்வந்தானை அறியாமை ஏற்றிக் கூறலுந், தலைவியையும் அங்ங்னம் அறியாமை யேற்றிக் கூறலும்

உ-ம்: நெடுந்தேர் கடை இத் தமியராய் நின்று

கடுங்களிறு காணிரே வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனம் கிளிகடிகு வார்’

வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பில்

வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புறம் போந்ததில் ஐய களிறு.” (திணை ஐம் 8)

இவை தலைவனைப் பேதைமை ஊட்டின.

1. இவை அவளறிவுறுத்தல், பின் வாவென்றல்.