பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్ర

’’ٹائے

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை வெறும்புத்ல்போல் வேண்டாது வெட்டி - எநிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு.” (திணை. நூற்.24)

இது தலைவியைப் பேதைமை யூட்டியது.

"இளையள் விளைவிலள்’’ என்பது உம் இதன்கண் அடங்கும்.

முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் - அங்ஙனம் பேதைமை யூட்டியவழி இவள் இக்குறை முடிப்ப ளென்று இரந்து ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி யறிந்திலள் போற் கூறினாளென ஆற்றானாயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவலென்று கூறி வருத்தந் தீர்த்தலும் : உ-ம்: "நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை

சிறுமுதுக குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவல் எனக்கே இன்னுயிர் அன்னள் ஆயினுந் தன்னுறு விழுமங் காத்த லானே.”

நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல் நீ அவட்கு உரைத்தி யெனக் கருதியென்றலிற் புணர்ச்சி யுணர்ந்தமை கூறினாள்.

அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ங்ணம் ஆற்றுவித்துங் கடிது குறைமுடியாமையைக் கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறலும்:

அஞ்சுதல் அச்சென்றாயிற்று. இவ்வச்சங் கூறவே அவன்

ஆற்றும்.

உ-ம்: 'யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்

கரும்பு மருண்முதல் பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய செறிதாட் பெருங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோ ரெஃகுவிளங்கு தடக்கை மலயன் கானத்து ஆரம் நாறு மார்பினை வாரன்மற் றைய வருகுவள் யாயே. ’’ (குறுந் , 198)

இது யாயை அஞ்சியது.