பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் شهیه

காரணமாவது நீ அரியையாதலின் இவள் ஆற்றாளா மென்று எதிர்கொள்கின்றேமென்றல்; கூட்டம் நிகழ்ந்தபின் தோழி இவ்வாறு கூறுதற்கு உரியளென்று அதன் பின் வைத்தார். இஃது அவன் வரவை விரும்பியது, வரைவு கடாயதன்று.

உ-ம்: 'நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக்

கடல்பா டழிய இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளையரு முதியருங் கிளையுடன் துவன்றி உப்பொய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ அயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப் பெருங்கள ந் தொகுத்த வுழவர் போல இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ பெருமை யென்பது கெடுமோ வொருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்து நும் - வண்ணம் எவனோ வென்றனிர் செலினே. ? (அகம்.30)

இதனால் தம்மான் இடையூறெய்தி வருந்துகின்றானை ஒரு நாள் வந்திலிரென மாயஞ் செப்பியவாறும், நீர் வாராமையின் வண்ணம் வேறுபடுமென ஏற்றுக்கோடுமெனக் காரணங் கூறிய வாறுங் காண்க. தம்மேல் தவறின்றாகக் கூறுங்காலத்து இது கூறுவரென்றற்குக் குறித்தகாலை யென்றார்.

புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும்-அக்கூட்டத் தின்பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந்தொழுகுமிடத்தும்:

உ-ம்: இவளே, நின்சொற் கொண்ட வென்சொல் தேறிப்

பசுநனை ஞாழல் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்த புலம்புமா ருடையள் உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்