பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு க.அக்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணையெஞ் சிறுதல் லூரே (குறுந் 81)

  • வாங்கு கோனெல்’ என்னுங் குறிஞ்சிக்கலியுள்,

அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த உரவுவில் மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன் கையென் றோழியை நோகிக்ப் படிகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லேசம் புதல் வேண்டும்...” கலி,50)

எனவும்,

'கடுமா கடவுறு உங் கோல்போ லெனைத்துங்

கொடுமையிலை யாவு தறிந்தும் அடுப்பல் வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே’ (கலி,50) எனவும் வரும்.

இத்துணையும் ஒரு கூட்டங் கூறினார்.'

குறைந்து அவட் படரினும் - தலைவன் இரந்து பின்னின்றமை கண்டு தோழி மனம் ஞெகிழ்ந்து தான் குறைநேர்ந்து தலைவிவிடத்தே சென்று குறைகூறினும்: - -

உ-ம்: வளையணி முன்கை வாலெயிற் றின்னகை விளைய ராடுந் தளையவிழ் கானல் விருந்தென வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே! (ஐங்குறு.198)

என வரும்,

மறைந்தவள் அருக - நாண் மிகுதியால் தனது வேட்கை மறைந்த தலைவி அக்கூற்றிற்கு உடம்படாது நிற்றலால்; தன்னொடும்

1. இத்துனையும் ஓர் கூட்டம் என்றது, பாங்கியின் கூட்டத்தினை.