பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ඵ්ද්ඨි. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தெண்ணில ரெண்ணியது முடிப்பர் கண்ணிலர் கொடியரிவ டன்னை மாரே...'

இது, நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது.

'நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்

பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டாள்

சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறி நீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ, ’’

இது குறிப்பு வேறு கொண்டாளென்றது.

புணர்ச்சி வேண்டினும் தலைவன் பகற்குறியையும் இரவுக் குறியையும் விரும்பிக் கூறுமிடத்தும் :

தோழிமேன கிளவி, அவை பலவகைய,

குறுந் 353: இஃது இரவுக்குறி. நயந்த தலைவன் சிறைப். புறமாகப் பகற்குறி நேர்வாள்போல் இரவுக் காப்புமிகுதி கூறியது.

பாடின்னருவி ஆட' என்றாள் அதன்கண் உதவினானென் பதுபற்றி அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று."

குறுந் 336.: இது. தலைவன் இரவுக்குறி. நயந்தவனைத் தோழி மறுத்தது.

குறுந், 346: இது, தோழி கிழத்தியை இரவுக்குறி. நயப் பித்தது.

"தண்ணத் துறைவன் கடும்பரி மான்தேர்

காலை வந்து மாலை பெயரினும் பெரிது புலம்பின்றே காணல் சிறிது புலம்பினமால் தோழி நாமே.”*

1, தலைவனும் தலைவியும் இருவரும் சேர்ந்து அருவியாடுதல் கற்பின் கண் அல்லது களவின்கண் இன்மையின், குறுந்தொகை 384-ஆம் பாடலிற் பாடின்னருவி யாடல் என்றது, தலைவி அருவியில் ஆடி வழுக்குற்று வீழ்ந்த இடர் நிலையில் தலைவன் அங்கு விரைந்துவந்து தலைவியை உய்வித்த உதவியைக் குறித்தது.

என்பதாம்.