பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு 、慈莎。

இது தலைவியது ஆற்றாமைகண்டு நம் வருத்தந் தீர்தற்கு இரவுக்குறியும் வேண்டுமென்றது. .

நற்றிணை, 67; இஃது இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது. . .

தினை. ஐம். 40: இஃது இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்னபெற்றியான் வருவாயாக வென்றது. مه .

திணை. நூற். 56. இஃது இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது. -

நற்றிணை 83, இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப் புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது.

நற்றிணை, 182: இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ என்றது. -

வேண்டாப் பிரிவினும் - தலைவன்றான் புணர்ச்சியை விரும் பாது பிரிவை விரும்பிய இடத்தும் :

அப்பிரிவு தண்டாதிரத்தலை முனிந்த மற்றையவழி இட்டுப் பிரிவும் அருமைசெய் தயர்த்தலு (111) மாம்; ஆண்டுத் தலைவற்குந் தலைவிக்குங் கூறுவன கொள்க.

வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குத் தசஞ் சில கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும் :

அது தலைவி வேளா ணெதிரும் விருந்தின்கண்' தோழி

கூறுவதாம்.

உ-ம்: பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து

புன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வலவன் வண்டேர் இயக்க நீயுஞ் செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்