பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உநி ககடு

இஃது அவனோடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றி. யமையாமை" கூறிக் காதற்சிறப்பு உரைத்தது.

ஒம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - தலைவற்குத் தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனக் கூறுங் கிளவியது பகுதிக் கண்ணும் : தோழிமேன கிளவி,

பகுதியாவன வரைவிடைப் பிரிவு முதலிய பிரிவிடத்தும் புனத்திடைப் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்தும் கூறு

வனவாம்.

அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவி நீள் புனங் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே,’’ (ஐங்குறு. 284)

இது, தினை அரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள் போற் சிறைப்புறமாக ஒம்படுத்தது. இன்னும் ஒம்படைக் கிளவியென்றதற்கு இவளை நீ பாதுகாத்துக்கொள்ளென்று தலைவன் கூறுங்கிளவியது பகுதிக்கண்ணுமென்றும் பொருள் கூறுக.

நற்.37 : இது, வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்துக்கொண்டிரு என்றாற்குத் தோழி கூறியது.

செங்கடுமொழியாற் சிதைவுடைத்தாயினும் - தோழி செவ். வனங் கூறுங் கடுஞ்சொற்களால் தலைவி நெஞ்சு சிதைவுடைத் தாயினும் : ஆண்டுந் தோழிமேன கிளவி,

அவை தலைவனை இயற்பழித்தலுந் தலைவியைக் கழறலு மால் ,

உ-ம்: "கெளவையம் பெரும்பழி தூற்ற னலனழிந்து பைதலஞ் சிறுதுதல் பசலை பாய நம்மிகற் படுத்த அவரினும் அவர்நாட்டுக்

1. உணர்வினறியாமை” என்றிருத்தல் வேண்டும்.