பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺品岛 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

குன்றங் கொடியகொல் தோழி ஒன்றுத் தோன்.நா மழைமறைத் தனவே. ’’

இது வரைவிடைப் பருவங்கண்டு அழிந்த தோழி இயந் பழித்தது. -

  • கேழல் உழுத களிப்பு:னக் கெர்ல்லையுள்

வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந் தாழருவி நாடன் தெளிகொடுத்தான்' என்தோழி நேர்வளை நெஞ்சூன்று கோல்." (ஐந்திணை எழு 11)

இஃது அவன் சூளுறவு பொய்த்ததென இயற்பழித்தது.

என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ’ அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்-என்பு உருகுமாறு தலைவனாற் பிரியப்பட்ட தலைவிக்கு வழிபாடாற்றிச் சென்று தான் கூறும் மொழியை அவள்மனத்தே செலுத்தித் தலைவன் அன்பை அவளி. டத்தே சேர்ததுக் கூறிய வற்புறுத்துதற் கண்ணும் :

அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுழிப் பிரிதலுங், காவற்குப் பிரிதலுமாம். ஆண்டு வற்புறுத்துங்கால் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் பிறவாறும் வற்புறுத்தும். முன் செங்கடு மொழியா லென்புழி இயற்பழித்தனவும் வற்புறுத்துதல் பயனாகக் கூறியன் வென்றுணர்க.

'மறுகுபு புகலு நெஞ்ச நோயின்

றிறுகப் புல்லி முயங்குகஞ் சிறுபுன் மாலை செயிர்ப்ப தாமே".

இது, பிரிவிடையாற்றாத தலைவியைத் தோழி நன்னிமித்தங் கூறி வற்புறுத்தது.

1. தெளிகொடுத்தல் - முன்னேற்று.

2. வழிச்சென்று - வழிபட்டுச்சென்று.

3. கடைஇ-செலுத்தி

4. தலைவியின் என்பும் நெகிழும்படி தலைவன் களவிற்பிரியும் பிரிவாவன் தலைமகளை வரைந்து கொள்ளுதல் வேண்டிப் பொருள் வயிற் பிரிதலும், வேந்தற் குற்றுழிப்பிரிதலும், காவிற்குப் பிரிதலும் ஆகும்.