பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கி 密詹

ஆசுரமாவது : கோல்லேறு கொடல், திரிபன்றியெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல்,

"முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்

தகைநலங் கருதுந் தருக்கின. ருளரெனின் இவையிவை செய்தாற் கெளியள் மற் றிவளெனத் தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித் தன்னவை யாற்றிய அளவையிற்றயங்க றொன்னிலை அசுரந் துணிந்த வாறே.”

இராக்கதமாவது : தலைமக டன்னிலுந் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது.

'மலியொற்பைம் பூணுளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே என்ப-வலிதிற் பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோள் இராக்கதத்தார் மன்ற லியல்பு.’

பைசாசமாவது : மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சி யும் இழிந்தோளை மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும் பிறவுமாம்.

'எச்சார்க் கெளியர் இயைந்த காவலர்

பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பின் உசாவார்க் குதவாக் கேண்மைப் பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே.”

'இடைமயக்கஞ் செய்யா இயல்பின னிங்கி உடை.மயக்கி உட்கறுத்தல் என்ப உடைய துசாவார்க் குதவாத ஊனிலா யாக்கைப் பசாசத்தார் கண்டமணப் பேறு.”

இனிக் கந்தருவமாவது கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்பட்டுக் கண்டு இயைந்ததுபோலத் தலைவனுந் தலை வியும் எதிர்ப்பட்டுப் புணர்வது.

1. ஆடைமாறுதலாவது தான்விரும்பிய பெண்ணை அவளுடைய காதலனது

உடைமுதலிய வேடத்தில் மறைந்து வஞ்சித்துக் கூடுதல்; இஃது உடைமயக்கல் எனவும்படும். அகலிகையைவிரும்பிய இந்திரன் அவள் கணவர் கோதமர் வேடத்திற் சென்று கூடியது இதன்பாற்படும்.