பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உே உல்க

இது சிறைப்புறமாகக் கூறி வரைவு கடாதலின் அதன்பின் வைத்தார்.

அவன் விலங்குறினும்’-தன்னானுந் தலைவியானும் இடையீடு படுதலன்றித் தலைவனாற் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும்; அது வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்றுழியும், காவற் பிரிவுமாம்.

களம்பெறக் காட்டினும்? . காப்பு மிகுதியானுங் காதன் மிகுதியானுந் தமர் வரைவு மறுத்ததினானுந் தலைவி ஆற்றாளாய வழி இெேதற்றினா னாற்றெனச் செவிலி அறிவரைக் கூஉய் அவர் களத்தைப்பெறா.நிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்,

களமாவது கட்டுங் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறி யாட்டிடமுமாம்.

பிறன்வரைவு ஆயினும் நொதுமலர் வரையக் கருதிய வழித் தலைவி சுற்றத்தார் அவ் வரைவினை ஆராயினும்; தோழி தலை வற்குந் தலைவிக்குங் கூறும்.

உ-ம்: 'கண்டல் வேலிக் கழிதழ் படப்பை

முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென நெடுந்தேர் பண்ணி வரலா னாதே குன்றத் தன்ன குவவுமண னித்தி வந்தனர் பெயர்வர்கொல் தாமே யல்கல் இளையரு முதியருங் கிளையுடன் குழி இக் கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நரம்பின்

1 , அவன் விலங்குறுதல் - தலைவனால் தடை புண் டாதல்,

2. களம்பெறக்காட்டுதலாவது, செவிலியின் வேண்டுகோளால் கட்டும் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமும் ஆகிய களத்தை அறிவர் முதலியோர் பெறாகிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்ப்ட க் கொணர்ந்து கிறுத்தல்,

8. பிறன் வரைவு ஆயினும் - நொதுமலர் வரையக் கருதிய வரைவினை

ஆராயுமிடத்தும்.