பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு உ0க.

இது, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி , தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச்செய்யக்கண்டு கடிதின் வரைவரெனக் கூறியது.

முன்னிலை அறன் எனப்படுதல் என்று இருவகைப் புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் (அறனெனப்படுதல் இருவகைப் பு ை தீ ர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும்) . அறனென்று சொல்லப்படுத் தன்மை இருவர் கண்ணுங்குற்றந்தீர்ந்த எதிர்ப்பாடென்று செவிலியிடத்தே கூறி அக் கிளவியை நற்றாயிடத் துஞ் செலுத்தினும்:

என்றது, புனறருபுணர்ச்சியும், பூத்தரு புணர்ச்சியுங், களிறு தரு புணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே, அவள் த ந் ைத க் கு ந் தன்னையர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டு வந்து தலைவிக்கு உணர்த்துதலும் பெற்றாம். அவ்வறத்தொடு நிலை எழுவகைய(207) எனப் பொருளியலுட் கூறுப,

உதாரணம் : காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி.39) என்னுங் குறிஞ்சிக்கலியுள், தெருமந்துசாய்த்தார் தலை’’ எனப் புனறருபுணர்ச்சியால் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பச் செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்ப அ வ ள் ஏனையோர்க்கு அறத்தொடு நின்றவாறு காண்க.

வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவி தமர்வரைவுடன்படத் தானும் வரைவுடன் பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக்கற்பாலை யல்லையெனக் கடுஞ்சொற் கூறி வரைவுகடாவல் வேண்டிய இடத்தும்.

1. முன்னிலை அறனெனப்படுதல் என்றுஇருவகை என்பதற்கு, முன்னி:ை வகையானாதல் அறத்தொடு கிலை வகையானாதல் இவ்விருவகையானும் எனவும், 'புரை தீர் கிளவி என்பதற்கு, தலைவற்கும் தலைவிக்கும் தனக்கும் குலத்திற்கும் குற்றந்தீர்ந்த கிளவி எனவும் பொருள் வரைக்தார் இளம்பூரணர்,

"அறனெனப்படுதல் இருவகைப் புரை தீர் முன்னிலை என்று தாயிடைப் புகுப்பினும் என்று சொற்களை மாற்றி அறனென்று சொல்லப்படுக்தன்மை இரு வல் கண்ணுங் குற்றக்தீர்ந்த எதிர்ப்பாடு என்று செவிலியிடத்தே கூறி அக் கிளவியை

கற்றாயிடத் துஞ் செலுத்திலும் எனப் பொருள் வரைந்தார் கச்சினார்க்கினியர்.