பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t) எ

E.

களவியல்-நூற்பா உடு

'அம்ம வாழி தோழி நம்மலை

af stoff au ir மிழியக் கோட னிடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந் தண்பனி வடந்தை யச்சிரம்

முந்துவந் தனர்.நங் காத லோரே.’’ (ஐங்குறு 223)

இது, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்குமுன்

வருகின்றமை யறித்த தோழி தலைவிக்குக் கூறியது (உச) ஆய்கவுர்ை

களவொழுக்கத்தில் தோழி உரையாடுதற்குரிய பொருள் வகை யெல்லாவற்றையும் தொகுத்துக் கூறுவது இந்நூற்பாவாகும்.

(இ. ள்) நறுமணம், தோற்றப்பொலிவு, ஒழுக்கம். உணவு, செய்வினை மறைத்தல், செலவு, பயில்வு எனத் தலைவி தலைவனை எதிர்ப்படுதற்கு முந்துற்ற நிலைமையை மனத்துள் கொண்டுவரும் எழுவகையுணர்வுகளாலும் தலைவிக்குக் கூட்டமுண்மை யறிந்த பின்னர், மெய்ம்மையாகவும் பொய்ம்மையாகவும் வழிபாட்டு நிலையிற்பிழையாது பலவாகி வேறுபடும் பொருள்களையுடைய சொற். களைக் கூறி ஆராய்தற்கண்ணும், தன்பாற்குறையிரத்தற் பொருட்டு எதிர்ப்பட்ட தலைமகனைப் பிறரறியாவாறு அவனது பெருமையினை எடுத்துரைத்து அவ்விடத்தைவிட்டு நீங்குமாறு செய்தற்கண்ணும், உலகத்தார் மணஞ்செய்துகொள்ளுமாறு வரைந்துகொள் எனக் கூறுமிடத்தும், தலைவியை அணுகுதற்கு இயலாமையைக் கூறி அகற்றுமிடத்தும், நின்னாற் காதலிக்கப்பட்டாளுக்கு நின் குறையினை நீயே யறிவுறுத்தி அதன்பின் என்னிடம் வருக எனக் கூறுதலும், நின்னால் விரும்பப்பட்ட அவள் நின் காதலையுணரும் முதுக்குறைவு பெறாத பேதைப் பருவத்தினள் எனக் கூறுதலும், முன்னர் அவளைக் கூடியவாறே அவளையடைக எனக் கூறி முறைமைப்பட ஒழுகுமாறு அறிவுறுத்தி நிறுத்தலும், இக்களவொழுக்கம் தந்தை தன்னையர்க்குப் புலனாயின் யாதாய் விளையுமோ என அஞ்சியவளாய் அவ்வச்சத்தினைத் தலைவனுக்கு அறிவுறுத்தலும், தன்னாற் காதலிக்கப்பட்டாள் இன்ன தன்மையள் எனத் தலைவன் கூறியவழி அவளும் நின் தன்மையளே என அவளோடு அவனை ஒப்புமை தோன்றச் சேர்த்துரைத்தலும் என ஒழியாது கூறப்பட்ட எண்வகைக் கூற்றுக்களும், பொய்யான நிகழ்ச்சிகளைப் புனைந்து கூறிக்கொண்டு தன்பாற் குறையிரந்து நின்ற தலைமகனை(த் தலைமகள் இகழாது) பொறுத்தகாரணமாகிய இருவரது பேரன்பினை எண்ணியகாலத்தும்,