பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ : தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'அதிர்ப்பில்பைம் பூண்ரும் ஆடவரும் தம்முள்

எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப-கதிர்ப்பொன்யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் கந்திருவர் கண்ட கலப்பு'

என இவற்றானுணர்க.

களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் உரித்து. மாலைசூட்டுதலும் இதன்பாற் படும். வில்லேற்றுதன் முதலியன பெரும்பான்மை அரசர்க்குரித்து, அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம் அந்தண ரொழிந்தோர்க்கு உரித்து, வலிதிற் பற்றிப் புணர்தலின். அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் கேட்படை முதலியன உளவா மென்றுணர்க.

அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளான் இன்பநுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற் கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடை வைத்தார். போகமும் வீடுமென் இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடுபெறுதற்குக் காரனம் முற்கூறினார்." ஒழிந்த மணங் கைக்கிளையும் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை அன்பொடு’ என்றார். பொருளாற் கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழித் தாமும் இயைதலிற் கந்தருவப்பாற் படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன் பொடு புணர்தலுங் கொள்ளப்படும். '

1. பெண்ணொருத்தி, தன்னை மணந்து கொள்ள விரும்பிவந்திருக்த ஆடவர்

பலருள் தான் விரும்பிய ஒருவனுக்கு மாலை சூட்டி மணந்து கொள்ளுதலும் கந்தருவ மணத்தின்ப ற்படும் என்பதாம்.

2. வீடுபெறுதற்குரிய காரணம், முன் புறத்தினையியலில் காஞ்சித்திணைக்குப்

பொதுவிலக்கணம் கூறும் வழிக் கூறப்பட்டது.

3. அன்பின் ஐந்தினையாகிய அகவொழுக்கமேயன்றி வெட்சி முதலிய புறத் தினையொழுகலாறுகளும் அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவையாதலின் அன் போடு புணர்ந்தனவாம் என்றார் இளம்பூரணரும்.