பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு ද්‍රි_ද් ද්

25.

27.

28,

நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனைநிலை வகையான் வரைதல் வேண்டுதல்,

ஐயச்செய்கை தாய்க்கு எதிர் மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக்கொடுத்தல்.

அவள் விலங்குறுதல்: அஃதாவது தலைவி மெலிந்து வேறுபட்டு வருந்தும் நிலையில் அம்மெலிவுக்குரிய காரணம் யாது என ஆராய்ந்து அறியும் பொருட்டுக் கட்டும் கழங்கும் இட்டுக் குறிபார்க்கும் நிலையில் அவள் பொருட்டுக் குறிபார்த்தலை விலக்குதல்.

களம்பெறக் காட்டுதல் : தலைமகளது நோய் தணித்தல் வேண்டி வேலனைக் கொண்டு வெறியாடப் புக்குழி அவ்வெறியினை விலக்கல்.

பிறன் வரைவு ஆய்தல்: அஃதாவது தலைமகளைப் பிறனொரு. வனுக்கு மணம் செய்து கொடுத்தலைப் பெற்றோர் ஆராயுமிடத்துப் பிறன் வரைவு மறுப்பித்தல்.

. அவன் வரைவு மறுத்தல்: அஃதாவது தலைவனுக்கு மணஞ்

செய்து கொடுத்தலைச் சுற்றத்தார் மறுத்த நிலையில் தலைமகனுக்குத் தலைமகளை மணஞ்செய்து கொடுத்தற்குப் பெற். றோரை உடன்படச் செய்தல். மேற்குறித்த நான்கிடங்களிலும் முன்னிலை, அறனெனப்படுதல் என்று இருவகைக் குற்றந் தீர்ந்த மொழிகளாற் செவிலியாகிய தாய் வழியாக நற்றாய் செவியிற் புகுமாறு தோழி அறத்தொடு நிற்பாள்.

வரைவுடம்பட்டோற் கடாவல் வேண்டுதல் : அஃதாவது தம்

சுற்றத்தார் வரைவுக்கு உடன்பட்ட செய்தியைத் தலைவனுக்கு உணர்த்தல்.

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை: அவ்வாறு தான் விரும்பிய

தலைவனுக்குச் சு ற் ற த் தார் வரைவு-ம்பட்டமை கூறித் தலைவியை வருத்தம் தணிக என வற்புறுத்தி ஆற்றுவித்தல். மேற்குறித்த முப்பத்திரண்டு பொருள் வகைபற்றியும் தோழி

கூற்று நிகழ்த்தற்கு உரியள் என்பதாம்.