பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

交.ö笠一 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

டேடு. களவல ராயினுங் காமமேற்படுப்பினும்

அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென் இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் காதல் கைம்மிகக் கனவின் அரற்றலுக் தோழியை வினாதலுக் தெய்வம் வாழ்த்தலும் போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்னும் பிரிவின் எச்சத்து மகள் கெஞ்சு வலிப்பினும் இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவுஞ் செவிலி மேன.

இளம்பூரணம் என்றது மேற் றலைவற்குந் தலைவிக்குத் தோழிக்குமுரிய கிளவி யெல்லாங் கூறி இனிச் செவிலிக்குரிய கிளவி யுனர்த்துதல் நுதலிற்று. களவலராதல் முதலாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று கின. வியும் அத்தன்மைய பிற கிளவியும் களவுக்காலத்துச் செவிலியின் மேலன் என்றவாறு. இவற்றுள் தோழியை வினாதலென வேறொரு கிளவியாக ஒதினாராயினும் அதன் முன்பு நிகழும் கிளவியெல்லாம் அவளை வினாதற்குக் காரணமாதலின் அவை யிண்டுப் பதின், மூன்றென வெண்ணப்பட்டன வென்க.

(இ. ள்.) கள்வல ராயினும் என்பது தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகி அலர் தூற்றப்பட்ட விடத்துத் தோழியை வினாவும் என்றவாறு.

காம் மேற் படுப்பினும் என்பது - தலைவிமாட்டுளதாகிய வேட்கை அளவிறப்பினும் தோழிலை வினாவும் என்றவாறு,

'மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன் றுண்டு. ’’ (குறள் 1273) அளள் மிகத் தோன்றினும் என்பது - பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு.