பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q.卤哆 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உ-ம்: மணியிற் றிகழ்தது நூல்போன் மடந்தை

யணியிற் நிகழ்வதொன் றுண்டு. ’’ (குறள், 1273)

இது, காமத்தால் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது.

அளவு மிகத் தோன்றினும்-கண்ணுந் தோளும் முலையும் பிறவும் புணர்ச்சியாற் கதிர்த்துக் காரிகை நீர்வாய் அவளிடத்து

அளவை மிகக்காட்டினும் :

உ-ம்: 'கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது.” (குறள், 1272)

இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது.

  • பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென

ஆகத் தரும்பிய சுணங்கும் வம்புவிடக் கண்ணுருத் தெழுதரு முலையு தோக்கி யெல்லிவள் பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந்தோ ளடைய முயங்கி நீடு நினைந் தருங்கடிப் படுத்தனள்............. ч * 4 ° 4 о 4 п

தாரார் மார்ப நீ தணந்த ஞான்றே. * (அகம் . 150)

இது, தோழி கொண்டு கூறியது.

தலைப்பெய்து காணினும் - இருவர்க்குங் கூட்டம் நிகழ்த

லானே தலைவனை இவ்விடத்தே வரக் காணினுந் தலைவியைப்

புறத்துப்போகக் காணினும் :

பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது.

உ-ம்: ' இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்

புலவு நாறு புகர்துதல் கழுவக் கங்குல் அருவி தந்த வணங்குடை நெடுங்கோட்டு