பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்பா க கடு

'அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை' (குறள் எக;

என்றலின் கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் துறையமை’ என்றார். '

ஆய்வுரை

தமிழ் மக்களது அன்பின் ஐந்தினையொழுகலாறாகிய கள வொழுக்கம் உணர்த்தினமையால் இது களவியல் என்னும் பெயர்த் தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு, குடிப்பிறப்பு முதலியவற்றால் ஒத்துவிளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் ஆணையால் தமியராய் ஓரிடத்து எதிர்ப்பட்டு உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல். ஐம்பெருந்தீமைகளுள் ஒன்றாகக் குறிக்கப்படும் களவு என்பது, பிறர்க்குரிய .ெ படா ரு ைள வஞ்சனையாற் கவர்ந்து கோடலாகிய குற்றமாகும். இஃது அத்தன்மையதன்றி ஒத்த அன்பு டைய கன்னியை அவள்தன் இசைவறிந்து சுற்றத்தார் அறியாது காதலால் உளங் கலந்து பழகும் பெருங்கேண்மையாதலால், மக்களது வாழ்க்கைக்கு அரண் செய்யும் சிறப்புடைய அறமாகவே கொள்ளப் படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இரு வரும் தமது நெஞ்சக்கலப்பினைப் பிறர் அறியாதவாறு உலகத்தார் முன் மறைந்தொழுகினராதலின் கரந்த உள்ளத்தராகிய அவ்விருவரது ஒழுகலாறு களவு என்ற சொல்லால் வழங்கப்படுவதாயிற்று. இக் களவினை மறைந்தவொ

^{ i ;

ஜக்கம், மறை, அருமறை என்ற சொற் களால் வழங்குவர் தொல்காப்பியர்.

மேல் கைக்கிளை முதற் பெருந்தினையிறுதியாக அகத்திணை ஏழின் பொதுவியல்பினை அகத்திணையியலில் எடுத்துக்கூறி அவற் றின் புறத்துநிகழும் வெட்சி முதற் பாடாண் ஈறாகவுள்ள புறத் திணைகள் ஏழின் இயல்பினையும் புறத்திணையியலுட் கூறி, கைக்

9. இவ்வுரைத்தொடர், மறையோர் தே எத்து எண் வகை மணங்களுள் ஒன்றாகிய கந்தருவத்திற்குக் தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கத்திற்கும் இடை

யேயுள்ள வேறுபாட்டினை விளக்குதல் அறியத்தகுவதாகும்.

கந்தருவம் கற்பின்றியும் கிகழ்தல் கூடும். அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கா கிய களவு, தலைமகளது உள்ளத்திண்மையாகிய கற்பின்றியமையாது எனக் கந்தருவத்திற்கும் களவொழுக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டினைப் புலப்படுத்துவது

இவ்வுரைத்தொடர். -