பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் تقف عيسية

பொருள்' என்றார் பிறப்பு முதலிய பத்தையுங் (273) கருதி,

காமர் கடும்புனல்’ என்னும் (39) கலியுள்,

  • அவனுந்தா, னேன லிதனத் தகிற் புகை யுண்டியங்கும்

வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும் கானக நாடன் மகன்;............... ......... எனவாங் கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த் துரைத்தாள் யாய்'

எனத் தோழி தான் கூறிய இருபாற் குடிப்பொருளைக் கூறிச், செவிலி அறத்தொடு நின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந்தவாறு காண்க.

இன்னவகையிற் பதின்மூன்று கிளவியோடு அன்னவை பிறவும். இத்தன்மைத்தாகிய கூறுபாட்டையுடைய பதின்மூன்று கிளவியோடே அவைபோல்வன பிறவாய் வருவனவும்; செவிலி மேன - தன் கூற்றாயும் பிறர்கொண்டு கூறுங் கூற்றாயும் கூறும் கூற்றுச் செவிலிக்கு உரியவாம் (எ று) .

"அன்னபிற என்றதனால்,

பறையடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய் கழற் செயலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந் 15}

இஃது உடன்போயபின் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

இன்னும் அதனானே,

'வல்லுரைக் கடுஞ்சொ வன்னை துஞ்சாள் (அகம் 12:)

என்றலுஞ்,