பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உக உஉடு

சிறுகிளி கடித றேற்றா எரிவள்’ (அகம்.28)

என்றலுங்,

கண்கோ ளாகநோக்கிப் பண்டு மினையையோ'

(நற்றிணை, 55) என்றலும் போல்வன பிறவுங் கொள்க. (24)

ஆய்வுரை

இது செவிலிக்குரிய கூற்றுவகையினை உணர்த்துகின்றது.

(இ-ஸ்.) தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப்புலனாகிய நிலையில் ஊரார் அலர் கூறிய காலத்தும், தலைவியின் வேட்கை அளவிறந்த நிலையிலும், அவனது வனப்பு அளவு மிக்குத் தோன்றிய காலத்தும், தலைவனொடு தலைவியை உடன்கண்ட காலத்தும், தலைவியின் மெலிவுக்குரிய காரணங்களைக் கட்டுவைப்பித்தும் கழங்கு பார்த்தும் கண்டறிந்த அவளது மெலிவு தீர வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல் வேண்டும் என இருவரும் பொருந்திய பக்கத்துச் செய்திக் கண்ணும், அங்ங்னம் வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்கிய நிலையில் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும், காதல் மிகுதியால் தலைவனை நினைந்து தலைவி கனவில் அரற்றிய பொழுதும் இவை பற்றித் தோழியை வினவுதலும் (இன்னவாறு நிகழ்ந்ததெனத் கோழி கூறியவழி இவ்விருவரது ஒழுகலாற்றினால் குடிக்குப் பழி விளைதலாகாது எனத்) தெய்வத்தை வேண்டுதலும், தலைவி தலைவனொடு உடன்போயினாள் என்று அறிந்த நிலையில் தோழி. யொடு ஆராய்ந்து அவ்விருவரையும் மனையறத்தின்கண் நிறுத்தற். கண்ணும், தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலததுத் தலைவி கற்பு வழிப்பட்டு மனைக்கண் அமைதியாக அடங்கியிருக்கும் அவளது நெஞ்சத் திண்மையை எண்ணிய நிலையிலும், தலைவனது குடிப்பிறப்பு தலைமகளது குடிப்பிறப்பினொடு ஒக்கும் என ஆராய்தற் கண்ணும் இத்தன்மையவாய பதின்மூன்று வகைக் கூற்றுக்களுடன் அவை போல்வன பிறவும் செவிலிக்குரியனவாம் எ-று.

இவை செவிலிதானே கூறும் தன் கூற்றாகவும் தலைவியும் தோழியும் செவிலிகூற்றாகக் கொண்டெடுத்து மொழியப்படுவனவாக வும் செவிலிக்கு உரியவாம் என்பார் செவிலிமேன' என்றார்,