பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உள

釜一

.

ఉ3

ஒருவனைக் காதலிக்கின்றாள் எனத் தலைவியொடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும், நிகழ்ந்ததனை மறைத்தல் தமது வாய்மைக்கு மாறாதலானும் தும் மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள்' என்றாற் போன்று ஐயுறுதற்குரிய கவர்த்த பொருளுடைய தொடரால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணந்து கொள்ளும் உரிமையுடைய கணவனாலும் அறியப்படாத பேரறி. வினையுடையாள் நும் மகளாகிய இவள் என வெளிப்படையாக ஒரு பொருளும், தன் காதற் கிழமையுடையவனாக ஒழுகும் தலை . மகனாலும் அறியப்படாத அறிவுரிம்ை பூண்டு அவன் பொருட்டு மயங்குகின்றாள் இவள்’ எனக் குறிப்பாக மற்றொரு பொருளும் தரும் நிலையில் அறிவர் கூறிய ஐயக்கிளவியை உய்த்துணர்ந்து தலைவனொருவனுடன் தம்மகளுக்கு உளதாகிய தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்து கொள்ளுதற்கும் உரியர் என்பது இந்நூற்பாவினால் அறிவுறுத்தப்படும் நுண்பொருளாகும்.

உ.அ. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் பெய்க்கீர் போலும் உணர்விற் றென்ப.

இளம்பூரணம்

இது தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள் ) தலைவி தனது வேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்குங் காலத்துக் கிழத்திக்கு இல்லை. அங்ங்னம் சொல்லாத விடத்தும் புதுக்கலத்தின்கட் பெய்த நீர்போலப் புறம் பொசிந்து காட்டும் உணர்வினையு முடைத்து அவ்வேட்கை என்றவாறு.

எனவே, குறிப்பின் உணரநிற்கும் என்றவாறு. தலைவன்மாட்டுக் கூற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும்.” )e-پی(

1, இளம் பூரணர் உரையின் சிதைவினைக் கூர்ந்து கோக்கின் இந் நூற். பாவின் மூன்றாமடி புதுநீர்மட்கலனறிய வாயிடை எனப்பாடம் இருந்திருக்குமோ என ஐயுற வேண்டியுள்ளது.

2. தலை விமாட்டு வேட்கை குறிப்பின் உணர கிற்கும். எனவே தலைவன்

பால் குறிப்பினாலன்றிக் கூற்றினாலும் நிகழப்பெறும் என்பதாம்.