பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா க リ?

காணலாகுமோ என எண்ணி அவ்விடத்தே பிற்றை நாளுஞ் செல்லு தலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப்புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு உண்டாயவழி தலைவன் தன்வருத்தத்தினைத் தன்னை வினவிய பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நிலையறிந்து வந்து கூற அங்கே சென்றும் கூடுவன். அவ்விடத்தும் இடையீடுபடின் தலைமகளது குறிப்புணர்ந்து தோழி வா யி லா க முயன்று எய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது முதற் காட்சி யில் இருவர்க்கும் உண்டாகிய வேட்கை தணியாது நின்று தலை மகளை மணஞ் செய்தபின்னர்க் கூடுதலும் உரியன். இவ்வகை யினால் இக்களவொழுக்கம் மூவகைப்படும் என்பர் இளம்பூரணர். களவியலின் முதற்சூத்திரம் இயற்கைப்புணர்ச்சியாவது இதுவென வுணர்த்துகின்றது.

(இதன் பொருள்) எல்லாவுயிர்க்கும் உரிய இன்பவுணர்வும், அவ் வின் பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினை யீட்டு தற்குரிய வரம்பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பென்னும் உயிர்ப்பண்புடன் பொருந்தி நிகழும் காமக் கூட்டத்தினைக் கருதி நோக்குங்கால், மறையோரிடத்து ஒதப்பட்ட எண்வகை மனத்தினுள் ளும் இசைத்துறையமைந்த நல்ல யாழினை யேந்தி யிருவராய்ப் பிரி வின்றியொழுகுவோராகிய கந்தருவரது ஒழுகலாற்றினை ஒத்த இயல் வினையுடையதாகும். எ. று.

தொல்காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர் தேனத்து மண முறைக்கும் தென்றழிழ் நாட்டு மணமுறைக்கும் இடையேயமைந்த ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க உணர்த்துதல் அவரது கடனா யிற்று. ஒருவன் ஒருத்தியாகிய இருபாலாரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மையாகிய கைக்கிளை, ஒத்த கேண்மை யாகிய அன்பின் ஐந்தினை, ஒவ்வாக் கேண்மையாகிய பெருந்திணை யென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம். தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டு வகையாகப் பகுத்துரைத்தல் வடநூல் மரபாகும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் தமிழ்ப் பொருளிலக் கண மரபின்படி கைக்கிளைப்பாற்படும் எனவும், பிரமம், பிராசா பத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையாய்