பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

من ب3 تخترق

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

எனவே ஈன்ற தாயினும் களவின்கட் சிறந்தாள் இவ ளென்றார் . கற்பிற்கு இருவரும் ஒப்பாராயிற்று. செவிலி சிறந்தமை சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. {a ή..)

ஆய்வுரை

இது, களவொழுக்கத்தில் தாய் எனக் குறிக்கப்படுபவள் செவிலியே என்கின்றது.

(இவள்.) ஆராய்தற்குரிய பெருஞ்சிறப்பினை புடைய அருமை வாய்ந்ததாய் உலகத்தாரறியாது மறைவில் நிகழும் அன்புரிமை ஒழுகலாற்றினைக் கூறுதற்குரிமை யுடையவளாதலின் (தலைவி தோழி என்னும் இருவராலும்) தாய் எனச் சிறப்பாகக் கூறப்படுபவள் செவிலித்தாய் ஆவாள் எ-று.

அறிவால் நிரம்பிய சான்றோர்களால் ஆராய்ந்து துணிதற்குரிய பெருஞ் சிறப்புடையதாய் ஒத்த அன்பினராகிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவரிடையே மறையில் நிகமும் கேண்மை என்பார், ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை என்றார். மறைந்த ஒழுக்கமாகிய இதனை உய்த்துணர்ந்து தோழியை வினவிக் கேட்டற்கும் அவ்வருமறையை, நற்றாய்க்குக் கூறுதற்கும் உரிய பழங்கேண்மையுடையாள் செவிலி என்பார், அருமறைகிளத்தலின் தாயெனப்படுவோள் செவிலியாகும்’ என்றார். கிளத்தல்’ என்றது தோழியாற் செவிலிக்குக் கிளக்கப் படுதலையும் நற்றாய்க்குச் செவிலி கிளத்தலையும் பொதுப்படச் சுட்டி நின்றது.

கூடு. தோழி தானே செவிலி மகளே.

இளம்பூரணம்

இது, தோழிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் துதலிற்று.

(இ-ஸ்.) கிளவுக்காலத்தும் இன்றியமையாளாகத் தலைவி யால் வேண்டப்பட்டாள் செவிலிமகள் என்றவாறு

1. களவொழுக்கத்தில் பெற்ற தாயினும் சிறந்தாளாகத் தாயென்று பேசப் படும் உரிமையுடையாள் செவிலியே என்றவாறு,