பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీ శ్రీ:శ్రీడ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கூசு, சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே.

இளம்பூரண ம்

இது, தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள். மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவுபெறும் என்றவாறு. '

எவவே, செவிலிய கள் என்னுந் துணையாற் பொலிவுபெறாள்; என்றும் தோழியாவாள் செவிலிமகளாதலேயன் றிச் சூழவும் உசாத் துணையாகவும் வல்லள் ஆதல்வேண்டும் என்றவாறு.

செய்யுள் மேற்காட்டப்பட்டன. (ங்க) நச்சினார்க்கினியம்

இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது. (இ-ள்.) உசாத்துணை நிலைமையின் - தலைமகனுந் தலை மகளும் உசாவுதறகுத் துணை மைசான்ற நிலைமையினாலே; சூழ். தலும் பொலிமே-புணர்ச்சி யுண்மையை ஏழுவகையானுஞ் சூழ்தற் கண்ணும் பொலிவு பெறும் (எ-று) .

எனவே, இம்மூன்று நிலைக்குந் தோழி உரியள் என்றார்.” உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. (கூடு)

ஆய்வுரை

இது, தோழிக்கு இன்றியமையாததோர் இயல்புணர்த்து கின்றது. -

(இ.ஸ்.) மேற்குறித்த தோழியாவாள் செவிலியின் மகள் என்ற அளவிலன்றித் தலைமகளைக் குறித்துத் தன் மனத்துள்ளே ஆராய் தற்கும், தலைமகளுக்குச் சூழ்ச்சித்துணையாக இருந்து அறிவுரை

வழங்குதற்கும் உரிய தோழமை நிலைமையிற் பொழிவுபெற்று விளங்குவாள் எ-று.

1. சூழ்தலாவது ஆராய்தல். - சாத் துணை நிலைமையாவது அங்கனம் ஆராயும் ஆராய்ச்சிக்கு - - விருந்து வினாவும் விடையும் நிகழ்த்தித் துணையாதல் 'பொலியும்' என்னும் செய்யுமென் னும் வாய்பாட்டு முற்றின் உயிர் மெய்கெட்டுப்

பொலிம் என நின்றது. ஏகாரம் ஈற்றசை.

2. அருமறை கிளத்தல், சூழ்தல், உ. சாத்துணையாதல் என்னும் இம் மூன்றற்கும் உரிமையுடையாள் தோழி என்ற னு.