பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

து:

ඥා

மதியுடம் படுதல் எனினும் புணர்ச்சியுணர்தல் எனினும் ஒக்கும் இம்மூன்றினும் ஒன்று கண்டுழி அவாவர் குறிப்பினாற் புணர்ச்சியுண ரும் என்றவாறு, குறையுணர்தல் முன்வைத்தார் நன்கு புலப்படு தலின். முன்னுறவுணர்தல் அதன் பின் வைத்தார், தலைவி வேறு பாடுகண்டு பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத்துணி வின்மையின், இருவரு முள்வழி யவன் வரவுணர்தல் அதன் பின் வைத்தார். ஆண்டுப் புதுவோன்போலத் தலைவன் வருதலானும் தலைவி கரந்த உள்ளத்தளாய் நிற்குமாதலானும் அத்துணைப் புலப் பாடின்மையின். அக்கருத்தினானே மேற்சொல்லப்பட்ட தோழிகடற்று மூவகையாகப் பொருள் உரைத்ததென்று கொள்க’ . (க.எ)

நச்சினார்க்கினியம்.

இஃது, அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்

கின்றது.

(இ - ள்) குறையுற உணர்தல் - தலைவன் இரந்து குறையுற்றவழி உணர்தல் முன் உற உணர்தல் - முன்னம் மிக உணர்தல் ; இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் தலை வியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வ ரு த ல ள ல் தலைவன் குறிப்புத் தலைவி குறிப்புங் கண்டுணர்தல் ; என மதியுடம் படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தினோடு ஒன்றுபடுத்துணர்தல் ஒருமூன்று கூற்றினையுடைத்து (sí -gi).

எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் நின்றது. உயிர் கலந்தொன்றலிற் குறிப்பின்றியும் பாக முணர்வாள் குறிப்புப் பெற்றுழி மிகவுனரும் என்று கொள்க. இது மூவர் மதி யினையும் ஒன்றுபடுத்துதலின் மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று.” இம் மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம் படுத்த லின்றென்றற்கு மூவகைத்தென்று ஒருமையாற் கூறினார். முன்னுற வென்றதனை

தோழியை

'முன் னெை

1. தோழி கூற்று மூவகையாகப் பொருளுரைத்தமை களவியல் 24-ஆம்

நூற்பாவின் உரை முடிவிற் கண்டு தெளிக.

2. மதி-அறிவு. உடம்படுத்தல் - ஒன்றுபடுத்து உணர்தல், மதியுடம் படுத்தலாவது, தலைவன் தலைவியாகிய இருவர் கருத்தினையும் தோழி தன் கருத்தினோடு ஒன்றுபடுத்தி உணர்தல். இவ்வாறு மூவர் மதியிணை. யும் ஒன்று படுத்துதலின் மதியுடம்படுத்தல் என்னும் பெயர்த்தாயிற்று.