பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

సి.

'ஏனல் காவ லிவளு மல்லள்’’ என்பது அவன் வரவுணர்தல்.

(a z}

ஆய்வுரை

இது, பாங்கிமதியுடம் பாடு முத்திறப்பட்டு நிகழும் என்கிறது. (இ-ள்.) தலைவன் தன்பால் வந்து இரந்து குறையுற்று நிற்றலால் அவனது உள்ளக் கருத்தினையுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும் , தலைவியும் தானும் ஒருங். கிருந்த కొణుకు வர அந்நிலையில் அவ்விருவரது உள்ள . கருத்தினையுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத்தினையும் வைத்து ஒன்றுபடுத்து உணரும் உணர்ச்சி மூ வகை: படும் என்பர் ஆசிரியர் எ -று .

பாங்கிமதியுடம்பாடாவது தலைவன் தலைவி யென்னும் காதலர் இருவரது அறிவினையும் தோழி தன்னறிவினால் ஒருங்கு வைத்து ஆராய்ந்து அவ்விருவரிடையே நெருங்கிய தொடர்புண்மை துணிதல், குறையுறவுணர்தல் என்பது, தலைவன் தோழியின்பால் குறையிாந்து நின்றநிலையில் இவன் என்னை இரந்து பின்னிற் கின்றது எதுகருதியோ?" என ஆராய்ந்துணர்தல். முன்னுறவுணர் தல் என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் தலைமகளது வேறுபாடு கண்ட தோழி, 'இவளது மேனி வேறுபாடு தெய்வத்தால் ஆயிற்றோ? பிறிதொருவாற்றான் ஆயிற்றோ?' என ஐயுற்றுக் குறிப்பினால் உணர்தல். இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் என்பது, மேற்குறித்த ஐயவுணர்வுகளோடு நின்ற தோழி, தானும் தலைவியும் ஆகிய இருவரும் உடனிருந்த நிலைமைக்கண் தலைவன் அங்கு வந்து தோழியை நோக்கி ஊரும் பெயரும் பிறவும் வினவி நின்றானாக, அந்நிலையில் அவ்விருவர் குறிப்பும் உணர்ந்து தலைவி யொடு தலைவனிடை முன்னமேயுள்ள தொடர்பினையுணர்ந்து துணிதல். தொல்காப்பியனார் தோழிக்குரியவாகச் சுட்டிய இவ் மூவகையுணர்வுகளையும்,

'முன்னு ற வுணர்தல் குறையுற வுணர்தல்

இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென் றம்முன் றென்ப தோழிக் குணர்ச்சி' (7) எனவரும் நூற்பாவில் இறையனார் களவியலாசிரியர் எடுத்தாண்டுள்

எமை இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.