பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் لیے ٹی

அடங்கும் எனவும், கந்தருவம் என்னும் ஒன்றும் அன்பின் ஐந்தினைப் பாற்படும் எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வகுத்துக் கூறியுள்ளார்கள். அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டம், மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினையுடைய தெனவே, கந்தருவகுமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது காமக்கூட்டமெனப்படும் இக்களவொழுக்கமாகும் என மறையோர் தேளத்து மன்றலாகிய கந்தருவத்திற்கும் தமிழியல் வழக்கமாகிய இக்களவொழுக்கத்திற்கும் இடையேயமைந்த ஒற்றுமை யினை உவமைவாயிலாக ஆசிரியர் தொல்காப்பியனார் உணர்த்திய

திறம் உளங்கொளத்தகுவதாகும்.

ஒருவனும் ஒருத்தியும் ஆகத் திமியராய் எதிர்ப்பட்டா இருவர், புனலோடும்வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மணமாகும். இங்ங்ணம் கூடிய இருவரும், தம் வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்வர் என்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற தன்மையும் கந்தருவத்திற்கு உ ண் டு . தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கம் என்பது ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், தான் - அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சி யேயாகும். இத்தகைய உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் உயிரோ ரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்த்தபின் ஒருவரையொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந்திண்மையே தமிழரதுஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் உளவாகும் பலவகை இடையூறு களாற் காதலர் இருவரும் உலகறிய மணந்து மனையறம் நடத்தற்கு இயலாத நிலையில் உள்ளப் புணர்ச்சியளவே நிலைபெற்று வாழ்ந்து இறந்த காதலரும் இத்தமிழகத்திலிருந்தனர். மணிமேகலைக் காப்பியத் திற் கூறப்படும் தருமதத்தன் விசாகை என்னும் இருவரும், யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் இவர்கள்’ எனத் தம்மைக் குறித்து ஊரவர் கூறிய பழிமொழியைவிலக்கித்தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவே யமைந்து உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும்.